விக்கிப்பீடியா நிரலாளர் பிராண்டன் ஆரிசிடமிருந்து

என்னுடைய இறப்புச் செய்தியின் முதல் வரி போன்று நான் வாழ்வதாக உணர்கிறேன்.

விக்கிப்பீடியாவிற்கு வேலை செய்வதைப் போல் முக்கியமானது என் வாழ்வில் வேறொன்றும் இல்லை என்பதே எனது எண்ணம். நாங்கள் ஒரு கலைக்களஞ்சியத்தை மட்டும் உருவாக்கவில்லை - மக்கள் சுதந்திரமாக இருக்கவும் உழைக்கிறோம். அறிவை அடையும் வழி இலவசமாகும்போது, நம் வாழ்வும் மேம்படுகிறது. இந்த உலகம் நம்மை விடப் பெரியது என்பதை அறிந்து கொள்கிறோம்; நமது சகிப்புத் தன்மையும், புரிந்து கொள்ளுதலும் மேலும் அதிகரிக்கிறது.

உலகின் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வலைத்தளங்களில் விக்கிப்பீடியா 5 ஆவது இடத்தில் உள்ளது. இதை இணையத்தில் சாத்தியமாகிய ஒரு சிறிய, லாப நோக்கற்ற நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன். இந்த வலைத்தளத்தில் நாங்கள் விளம்பரங்களை வைப்பதில்லை - ஏனெனில் அது நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதற்கு சமமானாதாக நாங்கள் கருதுகிறோம். இந்த வலைத்தளம் ஒருபோதும் ஒரு பிரச்சார கருவியாக இருந்ததில்லை - இனி அப்படி இருக்கபோவதுமில்லை.

நம் வலைத்தளத்தை படிப்பவர்கள் அளிக்கும் கொடையை கொண்டு மட்டுமே எங்களது பணி நடை பெற்றுவருகிறது. $5 அல்லது €10 அல்லது ¥1000 அல்லது தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை அளித்து விக்கிப்பீடியாவைக் காப்பீர்களா?

நான் விக்கிமீடியா நிறுவனத்தில் பணி புரியக் காரணம், என் ஆன்மாவில் உள்ள ஒவ்வொன்றும் இதுவே சரியான செயல் என்று கூறுகிறது. எதாவது ஒரு செயலியை நிறுவி, அதன் வாயிலாக ஏதும் அறியாத ஒரு சிறு குழந்தையை ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற வேலையை செய்யும் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், வீடு திரும்பும்போதோ நான் முற்றிலும் உடைந்து போய் இருப்பேன்.

ஒருவேளை நீங்கள் இதை அறியாமலிருக்கலாம் - விக்கிமீடியா நிறுவனம் மிகக் குறைந்த பணியாளர்களை கொண்டே இயங்குகிறது. முதல் பத்து இடத்தில் உள்ள மற்ற வலைத்தளங்களில் பணி புரிவோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர், பணம் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், நாங்கள் உருவாக்குவதில் ஒரு மிகச் சிறிய அளவை மட்டுமே அவர்கள் செய்கின்றனர்.

நீங்கள் விக்கிபீடியாவிற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் உலகெங்கும் கட்டற்ற அறிவு பரப்பப்படுவதை ஆதரிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஒரு பொக்கிஷத்தை விட்டுச் செல்வது மட்டுமன்றி, இந்த அரிய புதையலைப் பயன்படுத்துவோர் அனைவரும் உலகில் ஓர் உன்னத நிலையடைய வழி செய்கிறீர்கள். ஒரு நாளில் ஒவ்வொருவரும் இது போல செயல்படுவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறீர்கள்.

நன்றி,

பிரான்டன் ஹாரிஸ்
நிரலர், விக்கிமீடியா நிறுவனம்