Template:Appeal/default/ta

Revision as of 16:02, 14 November 2011 by Jsoby (talk | contribs) (Bot: Using standard numbers in appeals)

கூகிள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ பருமட்டாக 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 93 பணியாளர்களும் உள்ளனர்.

விக்கிப்பீடியா தளமானது இணையத்தில் 5ம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். 442 மில்லியன் மக்கள் இந்தத் தளத்தை ஒவ்வொரு மாதமும் பார்வையிடுவதுடன் பல பில்லியன் பக்கங்கள் பார்க்கப்படுகின்றன.

வணிகம் நன்று; விளம்பரமும் தீய செயல் அல்ல. ஆனால் அவற்றுக்கு நிச்சயமாக விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.

விக்கிப்பீடியா விசேடமானது. இது ஒரு பொது நூலகம் அல்லது விளையாட்டு மைதானம் போன்றது. மனதின் கோயில் போன்றது. இது சிந்திக்க, கற்க, நமது அறிவைப் பிறருட பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் செல்லக் கூடிய ஒரு இடம்.

நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை லாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் வித்தியாசமான ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாங்கள் பல வருடங்களாக இதை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாங்கள் எங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுகிறோம். விரயமாக்குதல் பிறரது தொழில் - எங்கள் வழக்கமல்ல.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் $5 கொடையளித்தாலே நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால் அனைவராலும் நன்கொடை வழங்க இயலாது. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.

இவ்வருடம் விக்கிப்பீடியாவைப் பாதுகாத்துப் பேணுவதற்காக $5, €10, ¥1000 அல்லது உங்களால் இயன்ற அளவு நன்கொடை வழங்குவதை பற்றி யோசியுங்கள்.

நன்றி,

ஜிம்மி வேல்ஸ்
விக்கிப்பீடியா நிறுவனர்